திருமங்கலத்திற்கு வடக்கே 5 கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது உரப்பனூர் கிராமம்!இக்கிராமத்தின் கண்மாய் நடுவே அமைந்துள்ள மடைக்கல்லில் முற்காலப் பாண்டியர் காலத்து பராந்தக வீரநாரயணன் காலத்து(கி.பி 9ம் நூற்றாண்டு) கல்வெட்டு காணப்படுகிறது!
1
2
இக்கல்வெட்டினை கேமரா மூலம் ஜீம் செய்து புகைப்படம் எடுத்தோம்! அது உங்கள் பார்வைக்கு!
கல்வெட்டின் மேல்புறத்தில் கல்வெட்டு தொடக்கமாக வெண்கொற்றக்குடையும் இருபுறமும் சாமரங்கள் மற்றும் கீழ்பகுதியில் கலசம் மற்றும் விளக்கு கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது(கீழே உள்ள படத்தைப் பார்க்க! )
இக்கல்லின் இருபுறத்திலும் கீழ்கண்ட இக்கல்வெட்டு வாசகம் இடம்பெற்றுள்ளது!
3-pandiyar-paranthagan-inscription-in-urappanur-kanmai-thirumangalam
கல்வெட்டு வரிகள் ( தமிழ் கிரந்த எழுத்துக்கள்): ஶ்ரீ கரிவரமல்லந்
கல்வெட்டு வரிகள்: ஶ்ரீ வீரநாரயணந்
கல்வெட்டு வரிகள்: ஶ்ரீ வீரநாரயணந்
இக்கல்வெட்டில் பாண்டியன் பராந்தக வீரநாரயணன் அரசனின் பெயர்களான “கரிவரமல்லன்” “வீரநாராயணன்” இடம்பெற்றுள்ளன கண்டு இக்கண்மாயைச் செய்வித்தவன் இப்பாண்டிய மன்னனே என்பது தெரிகிறது மேலும் இவனுடைய பெயர் கொண்டே இவன் வைஷ்ணவத்தைப் போற்றியுள்ளான் என்பதுமறியக் கிடைக்கிறது!
மலைநாட்டினரான பாண்டிய மன்னர்கள் முத்துக்கள் ஏற்றுமதிலேயே ஆரம்பத்தில் கவனம் செழுத்தினர் பின்னர் பல்லவர்கள்,சோழர்கள் பின்னாளில் வேளாண் உண்வு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்தமை கண்டு பாண்டியர்களும் பின்னாளில் பல்லவர்கள்,சோழர்கள் போல் காடழித்து விவசாயத்தினை பெருமளவு பெருக்கினர். இதற்காய் பல்வேறு கண்மாய்களை பாண்டிய நாட்டில் வெட்டினர்.அதில் ஓர் கண்மாய் தான் இக்கல்வெட்டு காணப்படும் இந்த உரப்பனூர் கண்மாய் ஆகும். இன்று ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களுக்கு நீர் பாசனம் அளிக்கும் இக்கண்மாய் பாண்டியர்கள் காலத்தில் மேலும் சிறப்புற்று விளங்கிற்று!
உரப்பனூர் கண்மாய் உரப்பனூர் ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது.கண்மாயின் கீழ்புறத்தில்(கிழக்கில்) அமைந்துள்ள கீழ் உரப்பனூர் என்றும்மேல் புறமாக (மேற்கில்) அமைந்துள்ள ஊர் மேல் உரப்பனூர் என்றும் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ஊராண்ட உரப்பனூர் என்றும் அழைக்கப்படுகிறது!
9ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டு இன்றும் இவ்வூர் கண்மாயின் நடுவே காணக்கிடைக்கின்றது.ஆனால் நம் திருமங்கலம் நகரம் அதனினும் பழமை வாய்ந்தது என்பதை தளவாய்புரம் செப்பேட்டு வரிகள் உணர்த்துகின்றன!வாய்ப்புள்ளவர்கள் இகண்மாய்க்கல்வெட்டினை நேரில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இக்கல்வெட்டினை பார்க்கும் வருங்காலச் சந்ததியினர் தங்கள் முன்னோர்கள் நீர்நிலைகளின் அவசியத்தை உணர்ந்து எவ்வாறு போற்றினார்கள் என்று அறிந்து கொள்ளட்டும்!
உரப்பனூர் ஊரைப் பற்றிய விரிவான தகவல்கள் மற்றொரு பதிவில்!
கூடுதல் செய்திகள்
இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் பராந்தக வீரநாரயணன் புகழ்பெற்ற பாண்டிய மன்னன் வரகுணனின் தம்பியாவான்.
சோழர்,பல்லவர்கெதிரான போரில் வெற்றியையும் ,தோல்வியையும் மாறி மாறி அடைந்த வரகுணன் இராச்சிய பாரத்தைத் தனது தம்பி பராந்தக வீரநாராயணனிடத்து ஒப்படைத்து விட்டுச் சிவதர்மத்தில் மூழ்கினான்.
செல்வமும்,புகழையும் தரக்கூடிய ஆட்சிக்கட்டிலை உதறி தனது தமையனுக்கு கொடுத்து ஆன்மீகத்தில் மூழ்கிய வியப்புக்குரிய செயலைச் செய்தவன் வரகுணன் ஆவான்.இதனை
“எம்கோ வரகுணன் பிள்ளை பிறைச் சடைக்கணிந்த பினாக பாணி எம்பெருமானை
உள்ளத்தில் இனிதிருவி உலகம் காக்கின்ற நாளில் ……”
எனும் பராந்தகனின் தளவாய்புரச் செப்பேடு வரிகள் உணர்த்துகின்றன!